நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2021 11:34 PM IST (Updated: 3 Oct 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை

கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

பரவலாக மழை 

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதுபோன்று மாநகர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 
இதன் காரணமாக மேம்பால பணிகள் நடக்கும் கவுண்டம் பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டி கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். 

நீர்வரத்து அதிகரிப்பு

அதுபோன்று மேற்கு தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேரூர் தேவிசிறை தடுப்பணையில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதேபோல் புட்டுவிக்கி தடுப்பணையும் நிரம்பி வழிந்ததால் அதில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். 

நொய்யல் ஆற்றில் தண்ணீர் இருகரையும் தொட்டபடி செல்வ தால், அங்கிருந்து உக்கடம் பெரியகுளம், குறிச்சி, செங்குளம் உள்பட குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை நீடிக்க வாய்ப்பு 

இதுகுறித்து காலநிலை ஆராய்ச்சி தலைவர் ராமநாதன் கூறுகையில், தென்மேற்கு பருவமழை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதம் மட்டுமே பெய்திருந்த மழை, தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழையும் சேர்ந்து 75 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. இந்த மழை இன்னும் ஒரு சில நாட்கள் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.



Next Story