மெகா முகாம்; 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


மெகா முகாம்; 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 Oct 2021 7:33 PM GMT (Updated: 3 Oct 2021 7:33 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று 4-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளிலும் மாநகராட்சி பகுதிகளில் சேர்த்து மொத்தம் 542 முகாம்கள் நடந்தது.
நெல்லை மாநகராட்சியில் மட்டும் 135 முகாம்கள் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 900 பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாத 18-க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்றது.
நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவில் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை, கலெக்டர் விஷ்ணு நேரில் பார்த்து ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாநகர் நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், உதவி ஆணையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story