சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை சிறையில் அடைக்க வேண்டும்-அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பலாத்காரம்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவர் கூலி வேலை செய்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ணனை வற்புறுத்தினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில் கிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.
சிறையில் அடைக்க உத்தரவு
இந்த மனுவை நீதிபதி பொங்கியப்பன் விசாரித்தார். முடிவில், இந்த கிரிமினல் அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு கீழ் கோர்ட்டு விதித்த தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது.
எனவே அவர் ஜாமீனில் விடப்பட்டு இருந்தால் அதை ரத்து செய்கிறேன். உடனடியாக மனுதாரரை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story