விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2021 8:23 PM GMT (Updated: 2021-10-04T01:53:39+05:30)

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்குத்தெருவை சேர்ந்த சங்கரின் மகன் விஜய்பிரதாப்(வயது 24). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி குணமாகாததால் மனமுடைந்த விஜய்பிரதாப் நேற்று முன்தினம் வீட்டில் விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜய்பிரதாப், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story