நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

சுப்பிரமணியபுரம், தெப்பம், சமயநல்லூர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
மதுரை,
சுப்பிரமணியபுரம், தெப்பம், சமயநல்லூர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பராமரிப்பு பணி
சுப்பிரமணியபுரம், தெப்பம் துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே சுப்பிரமணியபுரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தெற்குவெளி வீதி, பவர் ஹவுஸ் வீதி, சப்பானிகோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து. தெப்பம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட காமராஜர் சாலை ஒரு பகுதி, லட்சுமிபுரம் 1 முதல் 6 தெருக்கள், கான்பாளையம் 1 முதல் 5 தெருக்கள், கிருஷ்ணாபுரம் ஏரியா முழுவதும், பாதே அனுமந்தையர் சந்து, அமெரிக்க மிஷன் சந்து, மைனா தெப்பக்குளம் ஒரு பகுதி, பூசாரி தோப்பு, பூந்தோட்டம் தெரு, அந்தோணி மூப்பனார் தெரு மற்றும் கீழமாத்தூர் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினிேயாகம் இருக்காது.
இந்த தகவலை மதுரை மின்செயற்பொறியாளர் என்.மோகன் தெரிவித்து உள்ளார்.
சமய நல்லூர்
இதே போன்று சமயநல்லூர் கோட்டத்துக்கு உட்பட்ட பாலமேடு, மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.எனவே மாணிக்கம்பட்டி, உசிலம்பட்டி, மறவப்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, பாலமேடு நகர்ப் பகுதிகள், ஆதனூர் மற்றும் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்தும் நாளை காலை 10 மணியில் இருந்து பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சமயநல்லூர் கோட்ட மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
பாண்டிகோவில்
இதே போல இலந்தைக்குளம் ஐ.டி.பார்க் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே பாண்டிகோவில், கண்மாய்பட்டி, கோமதிபுரம், மேலமடை, ஹவுசிங் போர்டு, முகவை தெரு, மருதுபாண்டியர் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், சிமான்நகர், பாரதிபுரம், கருப்பாயூரணி, மஸ்தான்பட்டி, ராயல்கார்டன், பாண்டியன்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மதுரை வடக்கு பெருநகர் மின்செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story






