காரைக்காலில் 5 கொம்யூன் பஞ்சாயத்துக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்


காரைக்காலில் 5 கொம்யூன் பஞ்சாயத்துக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 3 Oct 2021 8:52 PM GMT (Updated: 3 Oct 2021 8:52 PM GMT)

காரைக்காலில் 5 கொம்யூன் பஞ்சாயத்துக்கு காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரி காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தனித்தனியாக குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
திருநள்ளாறு- முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், வட்டார காங்கிரஸ் தலைவர் அசோக் ஆனந்தன், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திருமலை, நிர்வாகிகள் ஆனந்தராமன், அன்பழகன், சுல்தான். நெடுங்காடு- வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாறன், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் திருமுருகன், ரமேஷ், வத்சலா.
கோட்டுச்சேரி- முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சேதுராமன், நிர்வாகிகள் நாகரத்தினம், சுப்புராயன், தேவகி. திரு-பட்டினம்- பொதுச்செயலாளர் மோகனவேல், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வமணி, நிர்வாகிகள் காதர் மெய்தீன், ஆறுமுகம், உதயராணி, சுவாணி. நிரவி- பொதுச்செயலாளர் மோகனவேல், நிர்வாகிகள் கருணாநிதி, மெய்யப்பன், முகமது தாரிக், சாந்தி, பாலகிருஷ்ணன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story