பெருந்துறையில் பிரபல கொள்ளையன் கைது; 54 பவுன் நகை மீட்பு


பெருந்துறையில் பிரபல கொள்ளையன் கைது; 54 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 4 Oct 2021 2:26 AM IST (Updated: 4 Oct 2021 2:26 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 54 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.

ஈரோடு
பெருந்துறையில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 54 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
தீவிர ரோந்து
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் போலீசார் தங்கள் பகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து செல்கின்றனர். மேலும் போலீசார் சில பகுதிகளில் நின்று கொண்டு வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான தனிப்படையினர், பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பிரபல கொள்ளையன் கைது
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள மங்களாபாளையம் வலையன்குட்டை பகுதியை சேர்ந்த வினோத்குமார் (வயது 55) என்பதும், இவர் பெருந்துறை, காஞ்சிக்கோவில், மலையம்பாளையம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வினோத்குமாரிடம் இருந்து 54 பவுன் தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர்.
1 More update

Next Story