நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்


நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2021 2:42 AM IST (Updated: 4 Oct 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ரூ.1½ கோடிக்கு கதர் ஆடைகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
சிறப்பு விற்பனை
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, காந்தி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து கதர் ஆடைகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 9 கிராமிய நூல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 150 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. 2021-2022-ம் ஆண்டு ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் நூல் உற்பத்தி செய்ய குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3 கதர் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உற்பத்தி கிளைகளின் மூலமாக 105 கதர், பாலிஸ்டர் துணி உற்பத்தி தறிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கதர் மற்றும் பாலிஸ்டர் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலமாக 90 நெசவாளர்களுக்கு நேரடியாகவும், சுமார் 170 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
காதி கிராப்டுகள்
மேலும் இந்த கதர் உற்பத்தி நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு ரூ.54 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2021-2022-ம் ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலிஸ்டர் துணிகள் உற்பத்தி குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 3 காதி கிராப்டுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2020-2021-ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடான ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கு, ரூ.86 லட்சத்து 97 ஆயிரத்துக்கு கதர், பட்டு, உல்லன் மற்றும் பாலிஸ்டர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டு அதாவது 2021-2022-ம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடு வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கதர் துணிகளின் விற்பனையை அதிகரித்திடும் எண்ணத்துடன் அனைத்து வகை கதர், பாலிஸ்டர் மற்றும் பட்டு ஆடைகளுக்கும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகின்றது.
ரூ.1½ கோடி நிர்ணயம்
கதர் வாரிய அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் சலவை சோப்புகள், குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, சந்தன மாலைகள், சுகப்பிரியா வலி நிவாரணி, எழில் சாம்பு மற்றும் தேன் வகைகளுக்கு 2020-21-ம் ஆண்டில் விற்பனை குறியீடாக ரூ.1 கோடியே 57 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதில் ரூ.82 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 52 லட்சம் கதர் விற்பனை குறியீடு வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டில் கிராமப்பொருட்கள் உற்பத்தி குறியீடு ரூ.1 கோடியே 57 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் கிராமத்தொழில் அலகுகள் மூலம் ரூ.94 லட்சத்து 7 ஆயிரம் குறியீடு எய்தப்பட்டுள்ளது. 2021-2022-ம் ஆண்டில் கிராமப்பொருட்கள் உற்பத்தி குறியீடு ரூ.1 கோடியே 35 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இதில் பயிற்சி ஆட்சியர் எகம்.ஜெ.சிங், ஆர்.டி.ஓ. பிரேமலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், கதர்கிராம தொழில் உதவி இயக்குனர் விஜயகுமார், தாசில்தார் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பசீர் அகமது, சுசீலா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
1 More update

Next Story