சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் கைது


சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2021 9:13 PM GMT (Updated: 3 Oct 2021 9:13 PM GMT)

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 113 பேர் கைது செய்யப்பட்டனர்

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 2-ந்தேதி மதியம் முதல் நேற்று காலை 6 மணி வரை சிறப்பு சோதனை வேட்டை மேற்கொண்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களை ேபாலீசார் கைது செய்தனர். இதில் கஞ்சா விற்ற 5 பேர், லாட்டரி விற்ற 6 பேர், மணல் திருட்டில் ஈடுபட்ட 11 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர், புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 20 பேர் மற்றும் மது விற்ற 70 பேர் என மொத்தம் 113 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர். மேலும் குற்றச்செயல்களில் அடிக்கடி ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி எச்சரித்துள்ளார்.

Next Story