உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி - 2 பேர் பணி இடைநீக்கம்


உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி - 2 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Oct 2021 12:39 AM GMT (Updated: 4 Oct 2021 12:39 AM GMT)

உத்திரமேரூர் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக வங்கிப் பணியாளர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ராயர் தெருவில் உத்திரமேரூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வேளாண்மைக்கு கடன், மற்றும் நகை கடன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த வங்கியில் நகை கடன் வழங்குவதில் மோசடி நடைபெற்று உள்ளதாக கூறி தொடர் புகார்கள் எழுந்தது.இதனையடுத்து, கூட்டுறவு சங்க அதிகாரிகள் தணிக்கை செய்ததில், போலி நகைகளை அடகு வைத்து ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வங்கிப் பணியாளர்களான கலைச்செல்வி (வயது 52), மேற்பார்வையாளர் ஜெயஸ்ரீ (48) ஆகியோர் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் வங்கி நகை மதிப்பீட்டாளர் ஆக பணியாற்றிய விஜயகுமார் (45), மற்றும் வங்கியின் 38 நகை கடன்கள் பெற்ற 25 நபர்களும் இவ்வழக்கில் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர்.சங்கப் பணியாளர்கள் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story