தாம்பரத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமில் நகராட்சி நிர்வாக அதிகாரி ஆய்வு


தாம்பரத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமில் நகராட்சி நிர்வாக அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 4 Oct 2021 9:36 AM GMT (Updated: 4 Oct 2021 9:36 AM GMT)

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று 4-வது கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை நகராட்சி நிர்வாக கண்காணிப்பு என்ஜினீயர் திருமாவளவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி இருக்கின்றதா?, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறதா? என அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.பின்னர் தடுப்பூசி போட வந்த பொதுமக்களிடம், தடுப்பூசி போடுவதால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல செயற்பொறியாளர் கருப்பையா ராஜா, தாம்பரம் நகராட்சி கமிஷனர் லட்சுமணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story
  • chat