சாலையோரம் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதல்; ஒருவர் சாவு


சாலையோரம் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதல்; ஒருவர் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2021 3:46 PM IST (Updated: 4 Oct 2021 3:46 PM IST)
t-max-icont-min-icon

ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியில் உள்ள ராமன் தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 42). இவர், காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் சேவை செய்து வந்தார்.

நேற்று சென்னையில் இருந்து காரில் காஞ்சீபுரத்துக்கு சென்றார்.காரை, டிரைவர் சீனிவாச சர்மா என்பவர் ஓட்டினார். ஒரகடம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த வரதராஜன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார் டிரைவர் சீனிவாச சர்மா, லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


1 More update

Next Story