தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் செந்தில் ராஜ் தகவல்


தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் செந்தில் ராஜ் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2021 11:17 AM GMT (Updated: 2021-10-04T16:47:46+05:30)

தனித்துவ அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான தனித்துவ அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து தனித்துவ அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஆவணங்கள்

விண்ணப்பத்துடன், முழு முகவரி, செல்போன் எண் மற்றும் கையொப்பம் அல்லது கைரேகை, ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், மாற்றுத்pறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்துப் பக்கங்களின் நகல், சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 1, ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் உரிய சான்றுகளுடன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அணுகி தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
---------

Next Story