சென்னை பெரியமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ‘ஷூ’க்கள் திருட்டு


சென்னை பெரியமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ‘ஷூ’க்கள் திருட்டு
x
தினத்தந்தி 4 Oct 2021 11:34 AM GMT (Updated: 2021-10-04T17:04:44+05:30)

சென்னை பெரியமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ‘ஷூ’க்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் உள்ளது.

சென்னை பெரியமேடு பகுதியில் முகமது அப்தாப் என்பவர் ‘ஷூ’க்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ‘ஷூ’க்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் உள்ளது.

கடையில் வேலை செய்யும் ஊழியர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக கடை ஊழியர்கள் 4 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story