கோவில்பட்டியில் காங்கிரசார் சாலை மறியல்


கோவில்பட்டியில் காங்கிரசார் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Oct 2021 11:40 AM GMT (Updated: 4 Oct 2021 11:40 AM GMT)

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரசார் சாலை மறியல் செய்தனர்.

கோவில்பட்டி:
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை வாபஸ் பெறக்கோரி பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு சென்ற, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ராகுல்காந்தி பேரவைத்தலைவர் சண்முகராஜ், காங்கிரஸ் சேவா தளம் மாவட்ட தலைவர் சக்தி விநாயகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Next Story