கஞ்சா விற்ற தம்பதி கைது


கஞ்சா விற்ற தம்பதி கைது
x
தினத்தந்தி 4 Oct 2021 5:41 PM IST (Updated: 4 Oct 2021 5:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையிலான தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் ரகு (வயது 36) மற்றும் அவரது மனைவி பேச்சியம்மாள் (29) ஆகியோர் தங்களது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக தனிப்படையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன் ரகு, மனைவி பேச்சியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து, கைதானவர்களிடம் இருந்து 1 கிலோ 650 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
1 More update

Next Story