பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2021 12:26 PM GMT (Updated: 4 Oct 2021 12:26 PM GMT)

ஆழ்வார்திருநகரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகிலுள்ள செம்பூர் தவசி நகரை சேர்ந்தவர் மாரிசங்கர். இவருக்கும், தென்திருப்பேரை சிவன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபாண்டி மகள் உலகரசிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். மாரிசங்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உலகரசி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று உலகரசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உலகரசி சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது சகோதரர் சதீஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story