மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்


மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:21 PM IST (Updated: 4 Oct 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி சிறுவன் படுகாயம்

ஊட்டி

மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு நேரு நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் ஹரிஷ் (வயது 16). இவர் நேற்று தனது நண்பர்களுடன், அங்குள்ள மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மழை பெய்ததால், மழையில் நனையாமல் இருக்க அருகே உள்ள மோட்டார் அறையில் ஒதுங்கினார். பின்னர் அங்கு தரை வழியாக சென்ற மின் ஒயரை ஹரிஷ் தெரியாமல் மிதித்ததாக தெரிகிறது. 

இதனால் மின்சாரம் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் நின்ற நண்பர்கள் 2 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, படுகாயம் அடைந்த ஹரிசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து எமரால்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story