விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2021 5:52 PM GMT (Updated: 4 Oct 2021 5:52 PM GMT)

உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:
உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் காரை மோதி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து  மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அமைப்பின் பொறுப்பாளர் வக்கீல் வேலு குபேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் ஸ்டாலின், மேகநாதன், செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 சீர்காழி
உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது காரை மோதி கொலை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சீர்காழி பஸ் நிலையம் அருகில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விவசாய சங்க போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் இமயவரம்பன், மாவட்ட விவசாய சங்க தலைவர் வீரராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அசோகன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
இதில் பெரியார் திராவிட கழக மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பிரகாஷ்,, மனிதநேய மக்கள் கட்சி, மக்கள் அரசு கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story