மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Oct 2021 6:25 PM GMT (Updated: 4 Oct 2021 6:25 PM GMT)

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்

ராமநாதபுரம், 
உச்சிப்புளி அருகே உள்ளது சேர்வைக்காரன்ஊருணி. இந்த ஊரைச்சேர்ந்தவர் இருளாண்டி மகன் கோவிந்தன் (வயது42). தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று திருப்புல்லாணி அருகே உள்ள பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரின் தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலைக்கு வந்திருந்தார். வேலை முடிந்து மதியம் மாடிக்கு சாப்பிட சென்றவர் சாப்பிட்டு கைகழுவ சென் றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் கழுத்து பகுதி உரசி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான கோவிந்தனுக்கு சுதா என்ற மனைவியும் ஒரு ஆண், ஒருபெண் குழந்தைகள் உள்ளனர்.

Next Story