டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2021 6:43 PM GMT (Updated: 4 Oct 2021 6:43 PM GMT)

பணிநிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்;
பணிநிரந்தரம் செய்யக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பணிநிரந்தரம்
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதிரடி சோதனைகளை நிறுத்தி அதிகாரி மட்ட அளவில் ஊழல்களை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோத மதுக்கூடங்களை உடனடியாக மூட வேண்டும். பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 
ஆர்ப்பாட்டம்
இதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளார் அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் அருள்மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட துணைத்தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பூபதி, மாவட்ட பொருளாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  மாவட்ட பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி   கோஷங்கள் எழுப்பினர்.

Next Story