கலெக்டர், பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்


கலெக்டர், பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்
x
தினத்தந்தி 4 Oct 2021 7:56 PM GMT (Updated: 4 Oct 2021 7:56 PM GMT)

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர், பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.

விருதுநகர், 
தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட உடன் கலெக்டர் அலுவலகங்களில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் தங்கள் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு நேற்று முதல் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த அனுமதி அளித்தது. இதையொட்டி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

Next Story