9 ஒன்றியங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் விஷ்ணு தகவல்


9 ஒன்றியங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் கலெக்டர் விஷ்ணு தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:51 PM GMT (Updated: 4 Oct 2021 8:51 PM GMT)

9 ஒன்றியங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 9 ஒன்றியங்களுக்கு தனித்தனி தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2 கட்ட தேர்தல்
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நாளை (புதன்கிழமை) பாளையங்கோட்டை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மாதேவி, அம்பை ஒன்றிய பகுதிகளிலும், 2-வது கட்டமாக 9-ந்தேதி (சனிக்கிழமை) நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஒன்றிய பகுதிகளிலும் நடைபெறுகிறது.
2 கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவடைந்த பிறகு 12-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்கவும், நடத்தை விதிகள் தொடர்பான பொது மக்கள் புகார்கள் மீது துரித நடவடிக்கைகள் எடுக்கவும் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தனித்தனி பார்வையாளர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்கள்
அதன்படி நெல்லை மாவட்டத்தில் 9 ஒன்றியங்களுக்கும் 9 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் வேட்பாளர்கள், வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
அம்பை ஒன்றியத்துக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (செல்போன் எண் 70103 26716), சேரன்மாதேவி ஒன்றியத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (94454 77846), மானூர் ஒன்றியத்துக்கு கலெக்டரின் வேளாண்மை பிரிவு நேர்முக உதவியாளர் (94866 57500), பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு திறன் பயிற்சி உதவி இயக்குனர் (95856 03363), பாப்பாக்குடி ஒன்றியத்துக்கு கலால் உதவி ஆணையர் (94439 36959) ஆகியோரிடம் தகவல்களை செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம்.
நாங்குநேரி ஒன்றியத்துக்கு பயிற்சி உதவி கலெக்டர் (95979 53053), களக்காடு ஒன்றியத்துக்கு தோட்டக்கலை துணை இயக்குனர் (94437 91079), ராதாபுரம் ஒன்றியத்துக்கு நில அளவைத்துறை உதவி இயக்குனர் (98430 53352), வள்ளியூர் ஒன்றியத்துக்கு கல்லூரிகளின் இணை இயக்குனர் (87546 18584) ஆகிய அலுவலர்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தேர்தல் பார்வையாளர்கள் அந்தந்த ஒன்றியங்களில் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story