புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
ஆக்கிரமிப்பில் ஊருணி
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள அலகன் ஊருணி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. அத்துடன் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குைறந்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன் பொன்னுச்சாமி, மேட்டுப்பட்டி.
===
ரெயில்கள் நின்று செல்லுமா?
மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் மற்றும் திருச்சி -ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ரெயில்கள், நவம்பர் மாதம் 7-ந்தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. ஆனால் 100 ஆண்டு பழமை வாய்ந்த மண்டபம் கேம்ப், வாலாந்தரவை ஆகிய ரெயில்நிலையங்களில் ரெயில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் மதுரை, திருச்சி ரெயில்கள் நின்று செல்ல ஆவன செய்யுமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகமது பாரூக், வாலாந்தரவை.
====
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் துலுக்கப்பட்டி ரெயில்வே கேட்டிலிருந்து ஆவுடையாபுரம் மன்னார்கோட்டை வழியாக கோட்டையூர் செல்லும் சாலையின் இருபுறமும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே செம்மண் போடப்பட்ட சாலை மழையால் சேதம் அடைந்து, வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி சாலையின் இருபுறமும் தார் ஊற்றி செப்பனியிட்டு அகலப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமையலிங்கம், விருதுநகர்.
=====
மாடுகளால் தொல்லை
மதுரை 48-வது வார்டு ஆத்திகுளம் கங்கைதெரு, ஏஞ்சல் நகர், மருதுபாண்டியர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பதுடன், அடிக்கடி விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயபிரகாஷ், ஆத்திகுளம்.
===
டாஸ்மாக் கடையால் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் செங்குடி பகுதியில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. மேலும், அதன் அருகில் குடியிருப்பு பகுதிகளும் நிறைந்துள்ளது. இந்த கடைக்கு வரும் மதுபிரியர்களால், பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவதுடன், அந்த வழியாக நடந்து செல்லும் பெண்களும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலகுரு, மேலசெங்குடி.
===
மின்விளக்கு வசதி
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியம், சூரப்பட்டி ஊராட்சி இந்திரா நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுடுகாட்டிற்கு செல்ல சாலைவசதி இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மக்களின் நலன்கருதி, சுடுகாட்டிற்கு செல்ல சாலை அமைத்து தருவதுடன், சுடுகாட்டில் மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.
சேக்அப்துல்லா, சூரப்பட்டி.
====
குண்டும், குழியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி திருவள்ளுவர் காலனி பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சிமெண்டு சாலையானது குண்டும், குழியுமான உள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாண்டீஸ்வரன், திருத்தங்கல்.
----
பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள்
மதுரை ரெயில் நிலைய வளாகத்தில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிக்கின்றன. இந்த நாய்கள் அவ்வப்போது ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளையும் கடித்து குதறிவிடுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரெயில் பயணிகள்.
====
வாருகால் சீரமைக்கப்படுமா?
விருதுநகர் நகராட்சி வார்டு 13-ல் உள்ள தெருக்களில் வாருகால்கள் அனைத்தும் சேதமடைந்து நிலையில் உள்ளது. இதனால், அந்த வழியாக வந்து செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேணடும்.
பழனிவேல், விருதுநகர்.
===
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் அனைத்தும் தேங்கி மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாமல் நிலையில் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் தொற்றும் பரவி வருகிறது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
முத்துமாணிக்கம், கீழவளவு.

Related Tags :
Next Story