புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 5 Oct 2021 1:03 AM GMT (Updated: 5 Oct 2021 1:03 AM GMT)

புகார் பெட்டி

சாலையில் தேங்கும் மழை நீர் 
பவானி தாமரைகுளம் திருவள்ளுவர் முதல் வீதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வீதியில் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே இதை சீர் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானி.


மின் விளக்கு தேவை
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பெரியசேமூர் எஸ்.எஸ்.பி. நகரில் மாரியம்மன் கோவில் வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள மின் கம்பத்தில் மின்விளக்குகள் இல்லை. இந்த பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. இரவு நேரங்களில் இந்த குடிநீர் குழாயில் பெண்கள் ஒருவித அச்சத்துடன் தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்குள்ள மின் கம்பத்தில் மின் விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமரன், அர்த்தனாரி. 


நடுரோட்டில் குழி 
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் 2 இடங்களில் குழி தோண்டப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் நடுரோட்டில் உள்ள இந்த குழிகளால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. இந்த குழிகளை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதர்சன், கோபி.


பழுதடைந்த ரோடு
கோபி 22-வது வார்டு முத்துஷா வீதிக்கு அருகில் உள்ள ரோடு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் அந்த ரோடு வழியாக செல்ல முடியவில்லை. எனவே பழுதடைந்த ரோட்டை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.


குழியை மூட வேண்டும்
அந்தியூர் அருகே உள்ள நகலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதற்காக தெருக்களில் குழி தோண்டி போட்டுள்ளனர். இந்த குழியில் மழை தண்ணீர், சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை உடனே முடித்து குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், நகலூர்.


வீணாகும் குடிநீர்
கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையத்தில் உள்ள பவானி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்தது. இதில் குடிநீர் வீணாகி தேங்கி நிற்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பிரமணியம், அய்யம்பாளையம்.


கழிப்பிட வசதி
அம்மாபேட்டை பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லியோ ஆனந்த் அற்புதம், சுந்தராம்பாளையம்.


சாலை அமைக்க வேண்டும்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சிக்கு உள்பட்ட தேவர்மலை கிராமத்தில் புட்டப்பனூர் தெரு உள்ளது. இங்கு கான்கிரீட் சாலை அமைக்க வி சாண்டு மற்றும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. உடனே சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், தேவர் மலை.

பாராட்டு 
தூக்கநாயன்பாளையம் ஒன்றியம் காமாட்சி நகரில் மின் கம்பி தொங்கி கொண்டிருக்கிறது என்ற செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தொங்கி கொண்டிருந்த மின் கம்பிகள் சரி செய்யப்பட்டன. இதுகுறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், சரி செய்த மின் வாரிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், காமாட்சி நகர்.


Next Story