ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
கோபி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காலை முதல் மதியம் வரை வெயில் அடிப்பதும். மாலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்வதுமாக இருக்கிறது. இந்தநிலையில் கோபி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மாலை 6 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல் பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம், கரட்டூர், நல்ல கவுண்டன் பாளையம், மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நகலூர், பெருமாபாளையம், பிரம்மதேசம், ஓசைப்பட்டி, வேம்பத்தி, கீழ்வாணி, ஆப்பக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை பெய்தபோது வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ரோடுகளில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது.
தவுட்டுப்பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, ஊஞ்சலூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story