கோபி அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது; லாரி- 2 மொபட்டுகள் பறிமுதல்

கோபி அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
கடத்தூர்
கோபி அருகே 1,750 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ரேஷன் அரிசி
கோபி நாயக்கன்காட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோபி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் போலீசாருடன் சம்பவ இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது அவைகளில் ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
லாரி-மொபட்டுகள் பறிமுதல்
உடனே போலீசார் லாரியில் இருந்த 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் முரட்டுபாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 45), நல்லசிவம் (28), கார்த்திகேயன் (31), மூர்த்தி (34), பாரதி (27), உதயகுமார் (22) ஆகியோர் என்பதும் இவர்கள் வீடுகளுக்கு மொபட்டில் சென்று, ரேஷன் அரிசியை வாங்கி லாரியில் கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியும், 2 மொபட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story






