சத்தியமங்கலத்தில் ரோட்டில் லாரி கவிழ்ந்தது; 3 பேர் காயம்- வைரலாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்

சத்தியமங்கலத்தில் ரோட்டில் லாரி கவிழ்ந்தது; 3 பேர் காயம்- வைரலாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகள்
x
தினத்தந்தி 5 Oct 2021 1:04 AM GMT (Updated: 5 Oct 2021 1:04 AM GMT)

சத்தியமங்கலத்தில் ரோட்டில் லாரி கவிழ்ந்தது. 3 பேர் காயம் அடைந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் ரோட்டில் லாரி கவிழ்ந்தது. 3 பேர் காயம் அடைந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கவிழ்ந்தது
சத்தியமங்கலம் அத்தாணி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அத்தாணி பகுதியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வாழைத்தார் பாரம் ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
 அப்போது ரோட்டில் நின்றுகொண்டு இருந்த கார் சாலையில் திரும்பியது. அதனால் கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் லாரியை திருப்பினார். இதனால் நிலைதடுமாறிய லாரி ரோட்டு ஓரத்தில் குட்டிக்கரணம் அடித்து கவிழ்ந்தது. 
 3 பேர் காயம்
இந்த விபத்தில் லாரியில் இருந்த வாழைத்தார்கள் சரிந்து கீழே விழுந்தன. மேலும் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் 3 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். 
இதில் லேசான காயத்துடன் அவர்கள் உயிர் தப்பினர்.
இந்த காட்சி அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story