பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா

பாப்பாரப்பட்டியில் உள்ள நினைவிடத்தில் தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலெக்டர் திவ்யதர்சினி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணிய சிவாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாப்பாரப்பட்டி,
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிய சிவாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கே.பி.அன்பழகன், ஜி.கே.மணி, கோவிந்தசாமி, வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா மற்றும் பாரத மாதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story