திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு


திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 5 Oct 2021 3:36 AM GMT (Updated: 5 Oct 2021 3:36 AM GMT)

திருவள்ளூரில் மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிமொழி (வயது 50). நேற்று முன்தினம் மணிமொழி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். பின்னர் காலை வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story