எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்
எஸ்எஸ்எல்சி மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்
கோவை
கோவையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் செய்யப்பட்டது.
மதிப்பெண் சான்றிதழ்
கொரோனா காரணமாக கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்பட வில்லை. அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வழங்கப்பட்டது.
மேலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் லிங்க் அனுப்பி வைக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு பதிவு
இந்த நிலையில் 2020-2021-ம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு நேற்று முதல் கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளி உள்பட அனைத்து பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதை அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி சென்றனர்.
இதைத் தொடர்ந்து மாணவ- மாணவிகள் தங்களின் வகுப்பு ஆசிரியர்கள் மூலம், தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் செய்து கொண்டனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், வருகிற 18-ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி மாணவர்கள் படித்த பள்ளியிலேயே https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யப்படும்.
இதனால் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவு, காலவிரயம், அலைச்சல் தவிர்க்கப்படுகிறது என்றனர்.
Related Tags :
Next Story