மோசடி வழக்கில் நிதிநிறுவன உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை


மோசடி வழக்கில் நிதிநிறுவன உரிமையாளருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 6 Oct 2021 2:10 AM IST (Updated: 6 Oct 2021 2:22 AM IST)
t-max-icont-min-icon

மோசடி வழக்கில் தேனியை சேர்ந்த நிதிநிறுவன அதிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

தேனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 56). நிதி நிறுவனம் நடத்தினார். கடந்த 2002-ம் ஆண்டில் பலரிடம் டெபாசிட் தொகை வசூலித்து, பல லட்சம் ரூபாயை திருப்பிதராமல் ஏமாற்றியதாக தேனி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் மணிகண்டன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2008-ல் தேனி மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு, நிதிநிறுவன மோசடி வழக்கில் சிக்கியவர்களை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமானந்த்குமார், இந்த வழக்கில் சிக்கிய ஒருவர் தொடர்ந்து ஆஜராகாததால் அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்படுகிறது. நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர் தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story