16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது


16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 6 Oct 2021 2:44 AM IST (Updated: 6 Oct 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் சிறுமியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

மேலூர்,


மேலூர் அருகே 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் சிறுமியின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்ைத பிறந்தது

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த கர்ப்பிணியின் விவரங்களை ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்ட போது அவருக்கு 16 வயதே என தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மாவட்ட சமூக நல அலுவலர் தேவி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் குழந்தை பெற்ற சிறுமிக்கு திருமணம் ஆனது தெரிய வந்தது.

கணவர் கைது

இதையடுத்து அவர் மேலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான அஜித்(23), அவரது தந்தை ஆண்டிச்சாமி, தாயார் பஞ்சவர்ணம், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தந்தை, தாயார் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்தனர்.
இது தொடர்பாக சிறுமியின் கணவர் அஜித்தை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாராணி கைது செய்தார்.

Next Story