நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்


நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
x
தினத்தந்தி 6 Oct 2021 3:38 AM IST (Updated: 6 Oct 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மதுரை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பராமரிப்பு பணி

மதுரையில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை(வியாழக்கிழமை) மழைக்கால பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே ஆரப்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில்ரோடு, கனகவேல் காலனி, மணிநகர், மெயின் 1-வது, 2-வது தெரு, ஒர்க் ஷாப் ரோடு, பேச்சியம்மன்படித்துறை, வெங்கடசாமிநாயுடு அக்ரஹாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் மற்றும் திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெரு, விவேகானந்தர் ரோடு.
மாகாளிபட்டி
மாகாளிபட்டி துணை மின்நிலையத்தில் உள்ள ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோவில் தெரு, கீரைத்துறை பகுதிகள், மேலத்தோப்பு பகுதிகள்.
அண்ணா பஸ் ஸ்டாண்டு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட இஸ்மாயில்புரம் 1-வது தெரு முதல் 19 தெரு வரை, கரிம்சாபள்ளிவாசல் 1-வது தெரு முதல் 5-வது ெதரு வரை, முமின்கோட்டை, அருணாச்சலபுரம் 1-வது தெரு முதல் 5 வரை, ஓலைப்பட்டினம் 1 மற்றும் 2-வது தெரு, பூந்தோட்டம் தெரு, அசன்தீன்சாய்பு சந்து, ருக்மணிபாளையம் சந்து, லட்சுமிபுரம் 8-வது மற்றும் 9-வது தெரு, முனிச்சாலை ரோடு, கீழவெளி வீதி ஒரு பகுதி, தென்கரை ரோடு ஒரு பகுதி, ஒபுளபடித்துறை, காயிதேமில்லத்தெரு, நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல், கீழவெளிவீதி, சுங்கம் பள்ளிவாசல் தெருக்கள், ஆட்டுமந்தை, பொட்டல்சோமசுந்தர அக்ரஹாரம், வடக்குமாட வீதி. மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

ஆவின்நகர்

இதே போல மேலமடை மற்றும் அண்ணாநகர் மின்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக மருதுபாண்டியர் தெரு, சித்தி விநாயகர் கோவில் தெரு, அன்பு மலர் தெரு, ஆவின்நகர், கோல்டன்நகர், கிழக்கு அண்ணாநகர், சென்மேரிஸ் பண்ணை, ஜே.ஜே.நகர், ஜீப்லி டவுன், தாசில்தார்நகர், மருதுபாண்டியர்நகர், சதாசிவன்நகர், பாகப்பா நகரின் ஒரு சில பகுதிகள், யானை குழாய் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள்.
பசுமலை துணை மின்நிைலயம் பழங்காநத்தம் பீடரில் பராமரிப்பு பணி காரணமாக கோவலன்நகர், ஒய்.எம்.சி.ஏ. நகர், இ.பி.காலனி, அழகப்பன்நகர், திருவள்ளூவர்நகர் முழுவதும், ஆர்.சி.தெரு ஒரு பகுதி, டி.பி.கே.ரோடு(சரவணா ஸ்டோர் முதல் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வரை), யோகியார் தெரு பகுதி, தண்டகாரன்பட்டி ஒரு பகுதி.
மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story