சத்தியமங்கலத்தில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடையும் பொதுமக்கள்


சத்தியமங்கலத்தில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடையும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Oct 2021 4:54 AM IST (Updated: 6 Oct 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடையும் பொதுமக்கள்

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளங்களில் இதுவரை பலர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
 சத்தியமங்கலம் தலைமை தபால் அலுவலகம், பழைய தினசரி காய்கறி மார்க்கெட், சத்தியமங்கலம் ரோட்டரி கிளப் என 3 இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டிருந்த அந்த இடங்களில் குழிகள் ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து நகராட்சியில் அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 நேற்று இரவு 9 மணிக்கு பெய்த மழையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நின்றது. குடிநீர் குழாய்கள் உடைந்தும் இதில் தண்ணீர் சேர்ந்துவிட்டது. 
சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் நிதானம் தவறி அந்த குழியில் விழுந்தார். இதனால் அவர் மயக்கமடைந்து விட்டார். பின்னர் அவர் மீட்கப்பட்டு சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 
இதேபோல் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாக்டர் ஒருவர் அந்த குழியில் விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. 
அந்த பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு இதுபற்றி எடுத்துக் கூறினார்கள். அதற்கு நகராட்சி அதிகாரிகள் இப்போது பணம் ஏதும் இல்லை. நீங்கள் யாராவது பணத்தைப் போட்டு 3 குழிகளையும் சரி செய்யுங்கள். பணம் வந்ததும் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று கவலைப்பட்டார்கள். 
இந்தநிலையில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் லட்சுமணன் என்பவர் பொதுமக்களின் நலன் கருதி குழிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

Next Story