காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறப்பு


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 2:12 PM IST (Updated: 6 Oct 2021 2:12 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறக்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் மிக்க வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 1961-ம் ஆண்டு கண்ணாடி அறை புதிதாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006-ம் ஆண்டு அந்த அறை பழுது பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் கண்ணாடிகளின் பாதரசமும் அதில் இருந்த மரக்குச்சிகளும் செல்லரித்து போயிருந்தது. இதையடுத்து தாமல் பகுதியை சேர்ந்த நாராயணன் ரூ.10 லட்சம் செலவில் முழுவதுமாக திருப்பணி செய்து கண்ணாடி அறையை புதுப்பித்தார்.

இதற்கான திறப்பு விழா கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில் உற்சவர் தேவராஜசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன.

Next Story