சுல்தான்பேட்டையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுல்தான்பேட்டையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 9:23 PM IST (Updated: 6 Oct 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுல்தான்பேட்டை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவசாயத்தை காப்பாற்ற அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. சீமானின் இந்த கருத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளதாக தெரிகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், கமல்ஹாசனை கண்டித்து, சுல்தான்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தில் சீமான், கமல்ஹாசனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story