தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Oct 2021 9:51 PM IST (Updated: 6 Oct 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


தெருநாய்கள் தொல்லை

கோவை உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி திரிகிறது. அவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. குறிப்பாக இரவு நேர பணி முடிந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
மார்ட்டின், உக்கடம். 

சர்வீஸ் சாலையில் குழி

கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் இருந்து செம்மொழி கதிர் நகர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் நடுவில் அடிக்கடி குழி ஏற்படுவதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அதை சரிசெய்ய வேண்டும்.
தர்மராஜ், செம்மொழி கதிர் நகர்.

போக்குவரத்து நெரிசல்

கிணத்துக்கடவு ரெயில்வே நிலைய சாலையில் பயணிகள் ஆட்டோ தாறுமாறாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
பிரபுராஜ், கிணத்துக்கடவு.

பழுதான சிக்னல் 

கோவை லங்கா கார்னர் போக்குவரத்து சிக்னல் பகுதியில் அடிக்கடி சிக்னல் விளக்குகள் பழுதாகிவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிற்கவா? போகவா? என்று குழப்பத்தில் உள்ளனர். போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் இல்லாவிட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. லங்கா கார்னர் பகுதியி பழுதான சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
தமீம் அன்சார், கோவை.

மழைநீர் தேங்குவதால் அவதி 

கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம், கோவில்பாளையம் எஸ்.என்.ஆர்.நகரில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே தொற்றுநோய் பரவுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
முத்தமிழன், கிணத்துக்கடவு. 

நிழற்குடை வேண்டும் 

முத்துக்கவுண்டன்புதூர் சூலூர் பிரிவில் இருந்து சூலூர் செல்லும் சாலையில் பஸ்நிறுத்தம் உள்ளது. இங்கு பயணிகள் காத்திருக்க நிழற்குடை வசதி எதுவும் இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கால்கடுக்க காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இங்கு நிழற்குடை அமைக்க வழிவகை செய்ய வேண்டும்.
குணசேகரன், குரும்பபாளையம். 

வீணாகும் குடிநீர்

போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக ரோட்டில் சிறுவாணி குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகிறார்கள். இந்த குழாய் பழுதடைந்து உள்ளதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான குழாயை சரிசெய்ய வேண்டும்.
முருகன், போத்தனூர்.

குண்டும் குழியுமான சாலை

கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே பழுதான சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
கண்ணன், கோவை. 

தெருவிளக்கு வசதி 

கோவை வடவள்ளி-இடையர்பாளையம் சாலையில் கோபால் தோட்டம் என்ற பகுதியில் 30 வீடுகள் உள்ளன. இங்கு 3 மின்கம்பங் கள் உள்ளன. அதில் ஒரு கம்பத்தில் மட்டும் தெருவிளக்கு பொருத்த வில்லை. இதனால் இருட்டாக இருப்பதால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மகேந்திரன், இடையர்பாளையம். 

அடிக்கடி பழுதாகும் சாலை 

பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் சாலை அடிக்கடி பழுதாகி வருகிறது. அவை சரிசெய்தாலும் 10 நாட்களில் மீண்டும் பழுதாகி விடுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சரிசெய்ய வேண்டும்.
மஜீத், சூளேஸ்வரன்பட்டி. 

தினத்தந்தி செய்தி எதிரொலி:
டவுன் பஸ் விடப்பட்டது

கோவைப்புதூரில் இருந்து சித்ரா பகுதிக்கு 2 எம் என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் கடந்த ஒரு ஆண்டாக இயக்கப்பட வில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக தற்போது அந்த பஸ் இயக்கப்பட்டு வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. 
சுரேஷ், கோவைப்புதூர்.  

சாக்கடை கால்வாய் அடைப்பு 

கோவை மீனா எஸ்டேட் 6-வது வீதியில் எஸ்.ஜி.நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இங்கு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
ஆரோக்கியசாமி, மீனா எஸ்டேட். 


Next Story