நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 6 Oct 2021 11:01 PM IST (Updated: 6 Oct 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கோவை

விபத்தில் இறைச்சி வியாபாரி இறந்த வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. 

இறைச்சி வியாபாரி சாவு 

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் (வயது 40). இறைச்சி வியாபாரி. இவர் கடந்த 21.2.2016 அன்று தனது மோட்டார் சைக்கிளில் உக்கடத்தில் இருந்து குனியமுத்தூர் சென்று கொண்டிருந்தார். 

அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு வழங்கக் கோரி கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள 3-வது செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

அரசு பஸ் ஜப்தி 

வழக்கை விசாரித்த நீதிபதி முகமது இப்ராகிம் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்து 86 ஆயிரம் நஷ்டஈடு தொகையாக வழங்க உத்தரவிட்டார். இந்த நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து இறைச்சி வியாபாரியின் உறவினர்கள் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். 

அதன்பேரில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டு ஊழியர்கள்  கோவை-மேட்டுப் பாளையம் இடையே இயக்கப்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜப்தி செய்யப்பட்ட பஸ் கோவை கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது.


Next Story