உதவி பேராசிரியையிடம் ரூ 65 ஆயிரம் மோசடி
உதவி பேராசிரியையிடம் ரூ 65 ஆயிரம் மோசடி
கோவை
வாடிக்கையாளர் விபரம் சேகரிப்பதாக கூறி உதவி பேராசிரியையிடம் ரூ.65 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உதவி பேராசிரியை
கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்தவர் ஜான் சுந்தரராஜ். இவரது மகள் பியூலா இசபெல் (வயது 25). இவர் சூலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.
அதில் ஆன்லைன் இணையதள முகவரி லிங்க் அனுப்பப்பட்டு இருந்தது. அதை உதவி பேராசிரியை கிளிக் செய்து உள்ளார். உடனே ஒரு வங்கியின் இணையதள முகவரி வந்தது. அதில் தங்களது வங்கி கணக்கு விபரங்கள் பதியப்படாமல் உள்ளது என்றும், உடனே விவரங்களை பூர்த்தி செய்யும்படி தெரிவிக்கப்பட்டது.
ரூ.65 ஆயிரம் அபேஸ்
இதையடுத்து பியூலா இசபெல் தனது வங்கி கணக்கு குறித்த அனைத்து விபரங்களையும் அதில் பதிவு செய்து உள்ளார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ஓ.டி.பி. எனப்படும் ரகசிய எண் வந்தது. அந்த எண்ணையும் அதில் அவர் பதிவு செய்தார்.
சில நிமிடங்களில் அவரது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என 3 தவணைகளில் ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக எஸ்.எம்.எஸ். வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து வங்கியில் கேட்டு உள்ளார்.
போலீசார் விசாரணை
அப்போதுதான் தனக்கு வங்கியில் இருந்து விவரம் சேகரிப்பதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story