புகாா் பெட்டி


புகாா் பெட்டி
x
தினத்தந்தி 6 Oct 2021 5:50 PM GMT (Updated: 6 Oct 2021 5:50 PM GMT)

தினத்தந்தி புகாா் பெட்டி

மின்விளக்கு ஒளிரவில்லை
கோபி லக்கம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் தெற்கு வீதியில் ஒரு மின்கம்பத்தில் மட்டுமே விளக்கு ஒளிர்கிறது. தெருவில் உள்ள மற்ற 2 கம்பங்களிலும் உள்ள விளக்குள் ஒளிரவில்லை. இந்த பகுதியில் விஷ பூச்சிகள் அதிகம் உள்ளன. எனவே தெருவிளக்குகள்  ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வெள்ளிங்கிரி, நேருநகர், கோபி. 

தெருவிளக்குகள் எரியவில்லை
சுள்ளிப்பாளையம் ஊராட்சி சிலேட்டர் நகர் மேற்கு பகுதி 2-வது பெரிய வீதியில் சுடுகாட்டு்க்கு செல்லும் பாதையில் உள்ள 3 தெருவிளக்குகள் கடந்த 5 மாதங்களாக எரியவில்லை. மேலும் ஒரு மின்கம்பத்தில் இருபுறமும் மரம் வளர்ந்து அதன் கிளைகள் மூடியபடி கிடக்கிறது. எனவே அந்த மின்விளக்கை அதன் அருகே உள்ள மின்கம்பத்துக்கு மாற்றி மின்விளக்கை எரிய வைக்கவும், பாதைக்கு வெளிச்சம் கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொ.பால் தினகரன், சிலேட்டர் நகர்.

அகற்றப்படாத குப்பை
ஈரோடு திண்டல் பழையபாளையம் 4 வழிச்சாலையின் அருகில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இது மழைக்காலம் என்பதால் குப்பைகளை உடனுக்குடன் அள்ளவில்லை என்றால் அவைகள் மழை தண்ணீரில் கலந்து சுகாதாரச்சீர்கேடு ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 4 வழிச்சாலை அருகே உடனுக்குடன் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொன்ராஜ், திண்டல்

குடிநீர் தொட்டி சிலாப்பில் துவாரம்
கோபி டவுன் அக்ரகாரம்  வீதியில் பெருமாள் கோவில் உள்ளது. இதன் எதிரில் குடிநீர் தொட்டி ஒன்று 2 சிலாப்புகள் போட்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலாப்பில் ஒரு துவாரம் ஏற்பட்டு உள்ளது. இந்த சிலாப்பை சரியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பொதுமக்கள், கோபி


Next Story