உசிலம்பட்டி அருகே இறந்து கிடந்த கரடி
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கரடி ஒன்று இறந்து கிடந்தது.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கரடி ஒன்று இறந்து கிடந்தது.
இறந்து கிடந்த கரடி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கரடி ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா, உசிலம்பட்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த கரடி உடலை ஆய்வு செய்தனர். அது 5 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி என்றும், இறந்து ஒரு நாள் ஆகி இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
உணவு செரிமான பிரச்சினை
இதை தொடர்ந்து கால்நடை டாக்டர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அதே இடத்தில் கரடியின் உடலை உடற்கூறு பரிசோதனை செய்தனர். அதில் தண்ணீரை தேடி மலையடிவாரத்துக்கு கரடி வந்து இருக்க கூடும். உணவு செரிமானம் ஆகாமல் இருந்ததால் உயிரிழந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து வனப்பகுதியில் குழி தோண்டி கரடி உடலை புதைத்தனர்.
Related Tags :
Next Story