பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது
பவானிசாகர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய வனவர்-டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டனர்.
பவானிசாகரை அடுத்த காராச்சிகொரை போலீஸ் சோதனைசாவடி அருகே பவானிசாகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் காரில் 97 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பவானிசாகர் வனவர் பெருமாள் (வயது 43) என்பதும், மற்றொருவர் பவானிசாகர் டாஸ்மாக் விற்பனையாளர் மூர்த்தி (46) என்பதும், இவர்கள் 2 பேரும் பவானிசாகரில் உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து மது வாங்கியதும், அந்த பகுதியில் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க இருந்ததும் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்களை கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளையும், மூர்த்தியையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story