6 கிலோ கஞ்சா பறிமுதல்;3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
உசிலம்பட்டி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 கிலோ கஞ்சா பறிமுதல்
உசிலம்பட்டி அருகே உள்ள மாதரையில் சட்டவிரோதமாக சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் மதுரையை சேர்ந்த பாண்டி மகன் சூரியபிரகாஷ் (வயது 27), ஜெயக்குமார் மனைவி ராஜேஸ்வரி (40), வாசுதேவன் மனைவி மதுரா (45) ஆகிய 3 பேர் சட்டவிரோதமாக கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி கைது
சேடபட்டி போலீசார் அல்லிகுண்டம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அதே ஊரைச் சேர்ந்த அய்யக்காள் (67) என்ற மூதாட்டி விற்பனை செய்வதற்காக 150 கிராம் கஞ்சா வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story