கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை


கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
x
தினத்தந்தி 7 Oct 2021 2:30 AM IST (Updated: 7 Oct 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனத்துக்கு தடை
கொரோனா பெருந்தொற்று காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மகாளய அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.
அதன்படி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், கோட்டை பெருமாள் கோவில், கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில், கொங்கலம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமியை பார்த்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். அவர்கள் கோவிலின் வாசலில் நின்றுகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
சங்கமேஸ்வரர் கோவில்
இதேபோல் பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்ரமணியசாமி கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கோபி பச்சமலை சுப்ரமணியசாமி கோவில், பெருந்துறை தங்கமேடு தம்பிக்கலை அய்யன் கோவில், மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில், அந்தியூர் செல்லீஸ்வரர் வகையறா கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், காஞ்சிக்கோவில் சீதேவி அம்மன் கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில், சிவகிரி தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், சத்தியமங்கலம் வேணுகோபால சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் அடைக்கப்பட்டு இருந்தன.
முக்கிய கோவில்களில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story