தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது


தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 2:34 AM IST (Updated: 7 Oct 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செங்கல் சூளை தொழிலாளி
அந்தியூர் அருகே உள்ள தோப்பூர் பாரையூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). செங்கல் சூளை தொழிலாளி. இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார் (39).
குமாரின் செல்போனை முருகேசன் பேசுவதற்காக வாங்கியுள்ளார். அதன்பின்னர் அவர் அதை திருப்பி குமாரிடம் தரவில்லை.  இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி குமார் முருகேசனிடம் சென்று செல்போனை கேட்டுள்ளார். அதற்கு முருகேசன் கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த குமார் கல்லால் முருகேசனை தாக்கியதாக தெரிகிறது. 
இறந்தார்...
இதில் மயங்கிய நிலையில் அதே இடத்தில் கிடந்த முருகேசனை மறுநாள் அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முருகேசன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து குமாரை வலைவீசி தேடி வந்தார். இந்தநிலையில் போலீசார் நேற்று குமாரை கைது செய்து பவானி குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். 

Next Story