ஈரோடு மாவட்டத்தில் 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஈரோடு ,
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளில் காலியாக உள்ள 27 பதவிகளுக்கு தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடத்தப்பட உள்ள இடங்களில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 58 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் 9-ந் தேதி வரை 3 நாட்களும், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 12-ந் தேதியும் அடைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story