உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2021 2:48 AM IST (Updated: 8 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷண்னுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு
உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷண்னுண்ணி தெரிவித்து உள்ளார். 
உள்ளாட்சி தேர்தல்
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019-ம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவி இடங்களில் இறப்பு, பதவி விலகல் காரணங்களினால் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி வரையில் ஏற்பட்ட 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தற்செயல் தேர்தல்கள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
அதன்படி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் வார்டு எண் 5-க்கும், ஈரோடு ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 4-க்கும், பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 10-க்கும், சென்னிமலை ஒன்றியம் முகாசிபுலவன்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும், அந்தியூர் ஒன்றியம் சங்கராபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும், நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கும், பெருந்துறை ஒன்றியம் கருக்குபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கும் நாளை தேர்தல் நடக்கிறது.
பொது விடுமுறை
மேலும் ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்காக, கொடுமுடி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சி வார்டு எண் 6-க்கும், கொளத்துப்பாளையம் ஊராட்சி வார்டு எண் 6-க்கும், அம்மாபேட்டை ஒன்றியம் முகாசிபுதூர் ஊராட்சி வார்டு எண் 2-க்கும், சிங்கம்பேட்டை ஊராட்சி வார்டு எண் 5-க்கும், மாணிக்கம்பாளையம் ஊராட்சி வார்டு எண் 6-க்கும், பூதப்பாடி ஊராட்சி வார்டு எண் 4-க்கும், பவானி ஒன்றியம் ஆண்டிகுளம் ஊராட்சி வார்டு எண் 3-க்கும், ஓடத்துறை ஊராட்சி வார்டு எண் 7-க்கும், சின்னபுலியூர் ஊராட்சி வார்டு எண் 1-க்கும், ஒரிச்சேரி ஊராட்சி வார்டு எண் 9-க்கும், பவானிசாகர் ஒன்றியம் புங்கார் ஊராட்சி வார்டு எண் 1-க்கும், நல்லூர் ஊராட்சி வார்டு எண் 1-க்கும், டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி வார்டு எண் 2-க்கும், வார்டு எண் 8-க்கும், மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சி வார்டு எண் 7-க்கும், முகாசிஅனுமன்பள்ளி ஊராட்சி வார்டு எண் 4-க்கும், குளூர் ஊராட்சி வார்டு எண் 2-க்கும், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி வார்டு எண் 11-க்கும், நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி வார்டு எண் 6-க்கும், அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி வார்டு எண் 15-க்கும் தேர்தல் நடக்கிறது.
மேற்படி ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ள வாக்கெடுப்பு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வாக்காளர்கள் வாக்களிக்கும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) பொது விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Next Story