தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த மலைப்பாம்பு பிடிபட்டது
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள தொட்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். விவசாயி. இவர் 4 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இவற்றை வெட்டும் பணியில் தொழிலாளர்கள் நேற்று மதியம் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மலைப்பாம்பு ஒன்று கரும்பு தோட்டத்தில் படுத்து கிடந்ததை கண்டு அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். இதுபற்றி அமிர்தலிங்கம் தலமலை வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று லாவகமாக மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதை ஒரு சாக்குப்பையில் போட்டு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பிடிபட்டது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story