ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 8 Oct 2021 8:21 PM IST (Updated: 8 Oct 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் பந்தல்கரடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அந்தப்பகுதியை  சேர்ந்த சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். ரோட்டில் வெளிச்சம் இல்லாததால் டார்ச் லைட் அடித்தபடி அந்த வெளிச்சத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது முன்னால் ரோட்டில் ஏதோ நெளிந்து செல்வது போல இருந்தது. உடனே டார்ச் லைட் அடித்து பார்த்த போது மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்தபடி சென்று கொண்டு இருந்தது. இதனை கண்டு பயந்து போன அவர்கள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டதும் அந்தப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் ஓடோடி வந்தனர். உடனே அவர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுபற்றி சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த மலைப்பாம்பு 10 அடி நீளம் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் கூண்டுக்குள் வைத்து அடைத்தனர். பின்னர் மலைப்பாம்பு சென்னம்பட்டியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. 
1 More update

Next Story